ENG vs PAK : தோனி போன்று அசால்டாக விக்கெட் கீப்பிங் செய்து அசத்திய பட்லர் – வீடியோ

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி

- Advertisement -

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக ரூட் 84 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் எடுத்தது கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 97 ரன்களை எடுத்தார் இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது பாபர் அசாம் மற்றும் சர்பிராஸ் அஹமத் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணியை வலுவாகக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 97 ரன்கள் எடுத்திருந்த சர்பராஸ் அகமட் பட்லர் மூலம் சிறப்பாக ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

பட்லர் செய்த இந்த ரன் அவுட் தோனியின் டெக்னிக்கை அப்படியே காப்பி செய்து செய்துள்ளார். தோனியின் இதுபோன்ற டெக்னிக்குகளை அடிக்கடி மற்ற நாட்டு வீரர்கள் பயன்படுத்துவது இயல்பு இருந்தாலும் இதனை தோனி கச்சிதமாக தொடர்ந்து இந்திய அணிக்காக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement