Jos Buttler : 6,4,4,4,4,6 ஒரே ஓவரில் 28 ரன்களை அடித்து நொறுக்கிய பட்லர் – வீடியோ

இன்று மதியம் நடைபெற்ற மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு

Buttler 2
- Advertisement -

இன்று மதியம் நடைபெற்ற மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பட்லரின் அதிரடி காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக அறிமுக போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய அல்சாரி ஜோசப் ஓவரின் 6 பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்பினார் பட்லர். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 27 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக டி காக் 52 பந்துகளில் 81 ரன்களை குவித்தார். ரோஹித் 47 ரன்களை அடித்தார். பிறகு 118 ரன்கள் இலக்காக ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Buttler

அதன்படி தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். இதில் 7 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். ஆட்டநாயகனாக பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement