இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை நக்கலடித்த 2 இங்கிலாந்து வீரர்கள் – நடவடிக்கை எடுக்கவுள்ள கிரிக்கெட் வாரியம்

Morgan

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக இடம்பெற்று பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே கலக்கிய ஒலே ராபின்சன், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இனவெறி மற்றும் பாலியல் ரீதியான பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுகளை நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது நெட்டிசன்கள் வைராலாக்கவே, அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் ராபின்சன் மீது விசாரணை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டது.

Robinson

இந்நிலையில் தங்களது பழைய ட்விட்டர் பதிவுகளால் மேலும் இரண்டு இங்கிலாந்து வீரர்கள் சர்ச்சையில் சிக்கி இருக்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு லிமிடெட் ஓவர்கள் கொண்ட போட்டிகளில் கேப்டனாக இருக்கும் இயான் மோர்கனும், அந்த அணியின் மற்றொரு மிக முக்கியமான வீரராக இருக்கும் ஜோஸ் பட்லரும், கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆங்கில அறிவை கிண்டலடிக்கும் விதமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டிருக்கின்றனர்.

- Advertisement -

ஒலே ராபின்சனின் பழைய ட்விட்டர் பதிவு வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது போல, தற்போது இந்த இருவரின் பழைய ட்விட்டர் பதிவுகளும் வைரலாகி இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. இந்தியர்களில் பெரும்பலானோர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்காக சார் என்று அழைப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்த வார்த்தைகளை தங்களது பதிவுகளில் பயன்படுத்தி, இந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவையும், ஆங்கிலம் பேசும் விதத்தையும் கொச்சைப்படுத்தியிருக்கின்றனர் இயான் மோர்கனும், ஜோஸ் பட்லரும். மேலும், இவர்களின் பதிவிற்கு 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ப்ரெண்டன் மெக்கல்லமும் அதே போன்று சார் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ரிப்ளை செய்திருக்கிறார்.

- Advertisement -

mor

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், சமூக வலைத்தளத்தில் இனவெறி தூண்டும் விதமாக பதிவிட்ட மேலும் ஒரு இங்கிலாந்து வீரரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து வந்திருக்கிறது. அவருடன் சேர்த்து இந்தியர்கள் ஆங்கிலம் பேசும் விதத்தை நக்கலடித்த இயான் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement