டி20 போட்டியில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் இவர்தான் …புகழும் ஷேன் பாண்ட் – இந்திய வீரர் யார் தெரியுமா ?

Bumrah1
- Advertisement -

இந்த ஆண்டின் 11வது ஐபிஎல் சீசன் இன்றுமுதல் தொடங்கப்பட உள்ளன. இன்று மாலை முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கப்படவுள்ளது. மொத்தம் 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்த ஐபிஎல் போட்டிகளானதுஇன்று தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Jasprit Bumrah

- Advertisement -

இன்று இரவு நடைபெறும் முதல்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றது.இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இரண்டாண்டு தடைக்கு பின்னர் மீண்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி களமிறங்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.அதேவேளையில் நடப்பு சாம்பியனான மும்பை அணியும் இன்று இரவு தனது பலத்தை சொந்த மண்ணில் காட்டிட உள்ளது. எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இந்நிலையில் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஷேன் பாண்ட் பேசுகையில் “இன்றைய போட்டியின்போது மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா சென்னை அணி வீரர்களை திணறடிப்பார். இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் சிறப்பாக செயல்படுவார். ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளை பொறுத்தவரையிலும் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் பும்ரா தான்.

- Advertisement -

bond

டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா டி20 போட்டிகளின் இறுதி ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்துவதில் வல்லவர் என்றார். கடந்த மூன்று வருடங்களில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக உருவாகியுள்ளார்” என்றார்.

பின்னர் பேசிய பும்ரா “எனக்கு கொடுக்கப்படும் வேலையை எப்போதும் சிறப்பாக செய்ய வேண்டுமென்று நினைப்பவன் நான். பந்துவீச்சை பொறுத்தவரையில் எங்கள் அணி பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. என் ஒருவனை நம்பி மட்டும் மும்பை அணி இல்லை. அனைவரும் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றியடைய வைப்போம்” என்றார்.

Advertisement