நான் விளையாடானது போதும். எனக்கு ஓய்வு வேனும். டி20 தொடரில் இருந்து விலகவுள்ள இந்திய வீரர் – அதிர்ச்சி தகவல்

Bumrah-1

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆட்டங்கள் இதுவரை மோசமாகவே அமைந்துள்ளன. முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி தங்களது 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த இரண்டு தோல்விகளை ரசிகர்கள் எதிர்பார்க்காததால் தற்போது பெருமளவு விரக்தி அடைந்துள்ளனர். மேலும் அரையிறுதிக்கான வாய்ப்பினையும் இந்திய அணி தற்போது கை விட்டது என்றே கூறலாம்.

indvsnz

ஏனெனில் இனிவரும் மூன்று போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும். ஆனால் தற்போதைக்கு அது நடைமுறையில் சாத்தியமில்லை என்றே கூறலாம். அந்த வகையில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 20 ஓவர்கள் விளையாடி 110 ரன்களை மட்டுமே குவித்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் போது வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியது.

- Advertisement -

அதுமட்டுமன்றி நியூசிலாந்து அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்ததால் தற்போது இந்திய அணியின் ரன் ரேட் மிகவும் சரிந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ரா தனக்கு ஓய்வு தேவை என்று வெளிப்படையாகவே கேட்டுள்ளார். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணிக்காக 2 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. அந்த இரண்டு விக்கெட்டுகளையும் பும்ரா மட்டுமே கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

bumrah

இந்நிலையில் அவரே இந்த உலக கோப்பை தொடரில் தனக்கு ஓய்வு தேவை என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சில நேரங்களில் ஓய்வு தேவைப்படும் அது முக்கியமான ஒன்று. பல மாதங்களாக குடும்பத்தைப் பிரிந்து இருப்பது மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது உண்மைதான். பிசிசிஐ முடிந்த அளவு எங்களுக்கு அனைத்து வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்தாலும் மனதளவில் நாங்கள் கஷ்டப்படுவதை தவிர்க்க முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி செய்த இந்த ஒரு தப்பு தான். இந்திய அணி இப்படி மோசமாக தோற்க காரணம் – இர்பான் பதான் விளாசல்

இது போன்ற சூழ்நிலையில் எங்களுக்கு சரியான ஓய்வு தேவை என்று பும்ரா கூறி உள்ளதால் நிச்சயம் அவர் சில போட்டிகளில் இந்திய அணியில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்திய அணி இருக்கும் நிலைமையில் இப்போது இவரது விலகல் பெரிய பாதிப்பாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement