கபில் தேவின் வரலாற்று சாதனையை முறியடிக்கவுள்ள பும்ரா – அப்படி என்ன சாதனை தெரியுமா ?

kapil
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்ற காரணத்தினால் அவர் பார்ம் அவுட் ஆனதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மீண்டும் உலகின் நம்பர் ஒன் பவுலர் என்பதை வெளிக்காட்டி கொண்டே வருகிறார்.

Bumrah

- Advertisement -

நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை என 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா தற்போது நடைபெற்று முடிந்த லார்ட்ஸ் டெஸ்டில் 2வது இன்னிங்சின் போது முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் திகந்தார். இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளையும் சேர்த்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் வருகிற 25ஆம் தேதி நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புதிய மைல்கல்லை அவர் வேகப்பந்து வீச்சாளராக எட்ட உள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை இந்திய அணி சார்பாக குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை கபில்தேவ் வைத்திருக்கிறார். 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியது கபில் தேவின் சாதனையாக இருந்து வருகிறது.

bumrah 1

இந்நிலையில் பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக மீதமுள்ள 3 போட்டிகளில் அவருக்கு 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான மனோஜ் பிரபாகர் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் சாதனைகளை முறியடித்த பும்ரா தற்போது கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

Bumrah

நிச்சயம் இந்த சாதனையானது மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே படைக்கப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெகு சில போட்டிகளை மட்டுமே அவர் இந்தியாவில் விளையாடி உள்ளது. மற்றபடி அவர் எடுத்த விக்கெட்டுகள் எல்லாம் அயல்நாட்டில் எடுத்த விக்கெட்டுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement