இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த விராட் கோலி இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் ஏற்கனவே அவர் மீது விமர்சனங்கள் அதிகம் இருந்த வேளையில் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பது குறித்த சில பேச்சுக்களும் அடிபட்டது.

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டிக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி அந்த போட்டியை தவறவிட்டார். இந்நிலையில் இரண்டாவது போட்டியிலாவது அவர் விளையாடுவாரா? இல்லை அணியில் இருந்து பார்ம் அவுட் காரணமாக நீக்கப்படுவாரா? என்பது குறித்த விவாதமே சமூக வலைதளத்தில் அதிகளவு எழுந்துள்ளது.
தற்போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத அவர் இரண்டாவது போட்டியிலாவது விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் காயம் குறித்து முதல் ஒருநாள் போட்டி முடிந்த பின்பு பேசிய ஆட்டநாயகன் பும்ரா ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டார். அதன்படி அவர் கூறுகையில் : விராட் கோலிக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை.

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின்போது விளையாடுகையில் விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அந்த போட்டியில் நான் விளையாடவில்லை. எனவே அவரது காயத்தின் தன்மை குறித்து நிச்சயம் எனக்கு முழுவதுமாக எந்த ஒரு தகவலும் தெரியாது.
இருந்தாலும் அவர் முதல் ஒருநாள் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டதால் நிச்சயம் இரண்டாவது ஒருநாள் போட்டிக்குள் உடற்தகுதியை எட்டி விடுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். பும்ராவின் இந்த கருத்துப்படி நிச்சயம் விராட் கோலி இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்றே தெரிகிறது.
இதையும் படிங்க : இவரை ஏன் டி20 பவுலராவே பாக்கமாட்றீங்க. அவரை டீம்ல எடுங்க 31 வயது வீரரை ஆதரித்த – பார்த்திவ் பட்டேல்
அதேவேளையில் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளதால் அந்த அணியை மாற்றாமல் அப்படியே இரண்டாவது போட்டிக்கு இந்திய அணி செல்லும் என்றும் கூறப்படுகிறது. அதனால் விராட் கோலிக்கு பதிலாக மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயரே மீண்டும் மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்ற ஒரு தகவலும் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



