நான் பார்த்து ஆச்சரியப்பட்ட பந்துவீச்சாளர் நீங்கள் தான் – பும்ரா பெருமிதம்

Bumrah

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா நேற்று நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

bumrah

இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் 338 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்தில் மலிங்கா உள்ளார். இந்நிலையில் மலிங்காவின் ஓய்வு குறித்து கிரிக்கெட் வீரர் பலர் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மலிங்காவின் சக பந்துவீச்சாளருமான பும்ரா மலிங்கா ஓய்வு குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கிளாசிக் மலி ஸ்பெல் கொடுத்ததற்கு மிக்க நன்றி நான் எப்போதும் உங்களின் பந்துவீச்சை பார்த்து ஆச்சரியப்பட்டு உண்டு. எப்போதுமே அந்த ஆச்சரியம் தொடரும். நீங்கள் கிரிக்கெட்டில் சாதித்த அனைத்திற்கும் எனது பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

இது போன்ற பலரும் மலிங்காவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் மலிங்கா தற்போது வாழ்துமையில் நனைந்தபடி உள்ளார்.

- Advertisement -
Advertisement