எனக்கு ஒன்னுமே தெரியாத அப்போ ரோஹித்தான் எல்லாத்தையும் செய்வாரு – ஜஸ்ப்ரீத் பும்ரா வெளிப்படை

Bumrah
- Advertisement -

தற்போதைய உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள், விமர்சகர்கள் என அனைவரும் கூறும் முதல் பெயராக ஜஸ்ப்ரீத் பும்ரா தான் இருப்பார். அந்த அளவிற்கு மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தனது அசாத்தியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

குறிப்பாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்து தன்னிடம் இருந்த இரண்டு ஓவர்களை வைத்து அசாத்தியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கும் அழைத்துச் சென்றார்.

- Advertisement -

போட்டியின் எந்த இடத்தில் அவரை பந்துவீச கேப்டன் அழைத்தாலும் விக்கெட் எடுக்கக்கூடிய ஒரு நம்பக கரமான பவுலர் என்ற பெயரையும் அவர் எடுத்துள்ளார். அந்த அளவிற்கு உலக கிரிக்கெட்டில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் தனது ஆரம்ப காலத்தில் தன்னுடைய பயணம் எவ்வாறு இருந்தது? என்பது குறித்து பேசி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஆரம்ப காலத்தில் எனக்கு கிரிக்கெட் குறித்து ஒன்றுமே தெரியாது. நான் சென்று ரோகித்திடம் தான் அனைத்தையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் நான் உங்களை நம்புகிறேன் என்று கூறுவேன். நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது எனக்கு அதிகம் தெரியாது.

- Advertisement -

ஐபிஎல் விளையாட தொடங்கிய போது ரோகித்திடம் நீங்கள் பீல்டிங்கை அமைத்து விடுங்கள். எனக்கு பீல்டர்களை எங்கெங்கு நிற்க வைக்க வேண்டும் என தெரியாது. நான் இந்த பந்தை தான் வீசப்போகிறேன் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பீல்டிங்கை அமைத்து விடுங்கள் என்றும் நான் உங்களை நம்புகிறேன் என்று ரோஹித்திடம் கூறுவேன்.

இதையும் படிங்க : அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்து இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இவருக்கு தான் இனி வாய்ப்பு கிடைக்குமாம் – விவரம் இதோ

பின்னர் காலம் செல்ல செல்ல மற்றவர்களை சார்ந்து இருக்க முடியாது என்று தெரிந்து எனக்காக பீல்டிங் செட்டப்பை நானே அமைக்க தொடங்கினேன். அதன் பின்னர் தற்போது அனைத்தும் சரியாக சென்று கொண்டிருப்பதாக பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement