IND vs AFG : இவரின் நம்பிக்கையே என்னை தொடர்ந்து சிறப்பாக பந்துவீச வைக்கிறது – பும்ரா

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும்

Bumrah
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 28ஆவது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

ind vs afg

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக கோலி 67 ரன்களும், ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

பின்னர் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது.

bumrah 1

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் பும்ரா கூறியதாவது : அணியின் கேப்டன் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கும்போது அது உங்களுக்கு நன்றாக பந்துவீச ஒரு உத்வேகம் கொடுக்கும். இந்த மைதானம் மெதுவாக இருந்ததால் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்துவீசவே நினைத்தேன். சூழ்நிலைக்கு தகுந்தவாறு யார்க்கர் வீசவும் தயாராக இருந்தேன். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை தந்து ரன்ரேட் அதிகப்படுத்தி பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர் என்று பும்ரா கூறினார்.

Advertisement