இந்த திட்டத்தினை வைத்தே நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசினேன் – ஆட்டநாயகன் பும்ரா

bumrah
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

- Advertisement -

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டிக்கு பிறகு பேசிய ஆட்டநாயகன் பும்ரா பேசியதாவது : ஒவ்வொரு பந்தினையும் கட்டுபாட்டுடன் பந்துவீச நினைத்தால் அது முடியாது. முதலில் நாம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற வேண்டும் அப்போதுதான் சிறப்பாக பந்துவீச முடியும். இன்று என்னயுடைய திட்டம் நான் சரியான ஏரியாவில் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் தருவதே.

Bumrah-1

அதனை இன்று நான் சிறப்பாக செய்ததால் விக்கெட்டுகளை வீழ்த்தமுடிந்தது. இன்று என்னுடைய திட்டத்தின்படி நான் சரியாக பந்துவீசியதாக கருதுகிறேன். துல்லியமான பந்துவீச்சுக்கு உடல் தகுதியும் முக்கியம். நான் என்னுடைய உடல் விடயத்தில் கவனமாக உள்ளேன் என்று பும்ரா தெரிவித்தார்.

Advertisement