துல்லியமான யார்க்கரை வீசி ஸ்டோக்ஸ்ஸை அலறவிட்ட பும்ரா. எப்படி மிஸ் ஆச்சு – வைரலாகும் வீடியோ

Bumrah-yorker
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி இந்திய பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 555 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Sibley 1

- Advertisement -

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கடைசி ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா அந்த நாள் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த சிப்லியை தனது துல்லியமான யார்க்கர் மூலம் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். சிப்லி மற்றும் ரூட் ஆகிய இருவரும் இணைந்து 200 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்த நிலையில் 87 ரன்கள் எடுத்திருந்த சிப்லியை முதல் நாள் ஆட்ட நேர முடிவின் கடைசி பந்தில் ஆட்டம் இழக்கச் செய்து வெளியேற்றினார் பும்ரா.

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது நாளும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த பும்ரா ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஒரு துல்லியமான அதிவேக யார்க்கரை வீசினார். 10 பந்துகள் பிடித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்த ஸ்டோக்ஸ் அப்போது அந்த பந்தில் இருந்து தப்பினார்.

அந்த துல்லியமான யார்க்கர் பந்து பேட்டின் உள்பகுதியில் பட பந்து ஸ்டம்பில் படாமலும், எல்.பி.யும் ஆகாமல் அவர் தப்பித்தார். இதனை கவனித்த வர்ணனையாளர்கள் இந்த பந்து எப்படி ஸ்டம்பை தவறவிட்டது ? நிச்சயம் விக்கெட் கிடைத்திருக்க வேண்டிய பந்து என்று புகழ்ந்தனர். இருப்பினும் ஸ்டோக்ஸ் எப்படியோ தடுமாறி அந்த பந்தில் இருந்து தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்.

இறுதியில் சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் 118 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பும்ராவின் இந்த அதிவேகமான துல்லிய யார்க்கர் வீடியோ தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement