DC vs MI : பவுலிங் தான் இப்படின்னா ? த்ரோவும் இப்படியா ? அதிரவைத்த – பும்ரா

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Bumrah
- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். டெல்லி அணியின் நட்சத்திர வீரரான பண்ட்-டை க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். பவுலிங்கில்தான் இப்படி என்றால் பீல்டிங்கிலும் நேற்று பும்ரா அசத்தினார். அக்சர் பட்டேல் அடித்த பந்தை தடுத்த பும்ரா எதிர்முனையில் இருந்த கீமோ பவுல்லை ரன் அவுட் செய்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பில் அதிககபட்சமாக க்ருனால் பாண்டியா 37 ரன்களும், டிகாக் 35 ரன்களும் மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா 32 ரன்களை அடித்தார்.

Bumrah

பிறகு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தவான் 35 ரன்களை குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement