இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா படைக்கவுள்ள வரலாற்று சாதனை – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணியானது, 18 ஆம் தேதி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் வேகப் பந்து வீச்சாளரான ஜாஸ்பிரித் பும்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ்வின் மிகப் பெரிய சாதனையை முறியடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

kapildev

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை இதுவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ்விடம் இருக்கிறது. அவர், 100 விக்கெட்டுகளை தனது 25வது டெஸ்ட் போட்டியில் எடுத்துள்ளார். தற்போது இந்திய அணியில் மட்டுமல்லாது உலகிலேயே மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளராக இருக்கும் ஜாஸ்பிரித் பும்ரா, இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். இந்த சுற்றுப் பயணத்தில் இன்னும் 17 விக்கெட்டுகள் எடுத்தால் கபில் தேவ்வின் சாதனையை முறியடித்து, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைப்பார்.

இந்த வரிசையில் கபில் தேவ்விற்கு அடுத்தப் படியாக இர்ஃபான் பதான் (28 போட்டிகள்), முஹம்மது ஷமி (29 போட்டிகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பும்ரா விளையாடியுள்ள 19 டெஸ்ட் போட்டிகளில் 17 டெஸ்ட் போட்டிகளை வெளிநாட்டு ஆடுகளங்களில்தான் விளையாடியுள்ளார். வெளிநாட்டு ஆடுகளங்களில் 21.59 என்ற மிகச் சிறந்த சராசிரயில் இதுவரை 79 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.

bumrah

இதனால் இந்த சுற்றுப் பயணத்திலும் அவர் சிறப்பக செயல்பட்டு, கபில் தேவ்வின் சாதனையை முறியடிப்பார் என்றே தோன்றுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இந்த மாதம் 18ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது இந்திய அணி. இந்த போட்டி முடிந்ததும், அதற்குப் பிறகு ஆகஸ்ட் 4ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.

Bumrah-1

இந்த தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் இன்று மும்பையில் இருந்து இங்கிலாந்திற்கு புறப்பட இருக்கின்றனர். இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக பும்ரா விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement