ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறும் பும்ரா – காரணம் இதுதான்

Bumrah-1
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடந்த போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி பண்ட்டின் அதிரடி ஆட்டம் மூலம் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது. இதனால், 214 ரன்கள் மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Delhi

- Advertisement -

அடுத்து ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா சிறப்பாக பந்துவீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 27 பந்துகளில் 78 ரன்களை அடித்த டெல்லி அணி வீரர் பண்ட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியில் மும்பை அணி வீரரான பும்ரா கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் போது பண்ட் பந்தினை வேகமாக அடித்தார். அந்த பந்தை தடுக்க நினைத்த பும்ரா டைவ் அடித்தார். இதனால் அவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தின் தீவிரம் எப்படி இருக்கிறது என்று கவனித்து வருகிறார்கள். ஒருவேளை காயம் அதிகமாக இருந்தால் உலகக்கோப்பை தொடருக்காக அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலக நேரிடும்.

Bumrah

காயத்தின் தன்மை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. காயத்தின் தன்மை லேசாக இருந்தால் அவர் தொடர்ந்து இந்த தொடரில் ஆடுவார். இல்லையென்றால், வரப்போகும் உலககோப்பையினை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. பும்ரா குறித்த தகவல்கள் இன்னும் அதிகாரப்படி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement