மீண்டும் தன் வருகையை இந்திய அணிக்கு அறிவித்த பும்ரா – விவரம் இதோ

Bumrah

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் போட்டிகள் மற்றும் 42 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். இவர் இந்திய அணியின் முக்கிய மேட்ச் வின்னர் ஆக பார்க்கப்படுகிறார் இந்நிலையில் உலக கோப்பை தொடர் முடிந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் கடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை.

View this post on Instagram

Coming soon! ????????

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

இந்நிலையில் தற்போது நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இடம்பெறாத இவர் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக தற்போது சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நேஷனல் கிரிகெட் அகடமியின் நேரடி கவனத்தில் உள்ள பும்ரா தனது காயத்தில் இருந்து விடுபட்டு தற்போது உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் நான் வருகிறேன் என்று குறிப்பிட்ட அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதன் மூலமாக அவரது காயம் முழுமையாக குணமடைந்து விட்டது என்றும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்றும் பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.