- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இஷாந்த் சர்மாவை பின்னுக்கு தள்ளி எலைட் லிஸ்ட்டில் இடம்பிடித்து மாபெரும் சாதனை நிகழ்த்திய – ஜஸ்ப்ரீத் பும்ரா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மெல்போர்ன் நகரில் இன்று துவங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியிலும் தனது அசத்தலான பந்துவீச்சை தொடர்ந்து வருவது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஷாந்த் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பும்ரா :

அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26-ஆம் தேதியான இன்று மெல்போர்ன் நகரில் துவங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள வேளையில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதோடு இதன் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் பும்ரா படைத்த சாதனை யாதெனில் : இன்று அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளோடு சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 435 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த இஷாந்த் சர்மாவை ஆறாவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி பும்ரா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையில் கபில் தேவ் 687 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி இதை வேணும்னே செய்யல.. நடந்தது இது தான்.. 19 வயது ஆஸி வீரர் கோன்ஸ்டஸ் பேட்டி

அவரைத் தொடர்ந்து ஜாகீர் கான் (597) இரண்டாவது இடத்திலும், ஜவஹர் ஸ்ரீநாத் (551) மூன்றாவது இடத்திலும், முகமது ஷமி (448) நான்காவது இடத்திலும் உள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது பும்ரா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இனிவரும் போட்டிகளில் அவர் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டும் அவரை இந்த பட்டியலில் முன்னோக்கி கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -