இவர் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துவிட்டார்..! எதிரணி வீரரை புகழ்ந்த அஸ்வின்.! யார் தெரியுமா

Ashwin
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியில் அனைத்து அணிகளுமே பிளே ஆப் சுற்றிற்கு நுழையும் முனைப்பில் உள்ளது. நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் மும்பைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மும்பை அணியின் பும்ராவை பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

rahul

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(மே 16 ) நடைபெற்றது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின, இந்த இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக இருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பை அணியை பேட்டிங் செய்ய வைத்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடினார். ஆனால் மற்ற வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

punjab

இந்த போட்டியின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் கூறுகையில் “இந்த தோல்விக்குறித்து நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.நான் முழுவதும் வெறுமையாக உணர்கிறேன். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக தான் இலக்கை நோக்கி விளையாடினும், ஆனால் மும்பை அணியின் பும்ரா சிறப்பாக பந்து வீசி அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டார். எங்கள் அணியில் கே எல் ராகுல் சிறப்பாக விளையாடி வந்தார் ஆனால் இறுதியில் பம்பரா தூக்கி அடித்து அவுட்டானது சரியா தவறா என்று தெரிவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement