IND vs WI : அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் கேப்டனான பும்ராவிற்கு காத்திருக்கும் சவால்கள் – சாதிப்பாரா?

Bumrah
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் இழந்துள்ள இந்திய அணியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அயர்லாந்து நாட்டையும் சென்றடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் காயத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ள பும்ரா கேப்டனாக விளையாட இருக்கும் வேளையில் இந்த தொடரில் அவர் சந்திக்க இருக்கும் சவால்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அதன்பிறகு ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வரும் வேளையில் தற்போது மீண்டும் அவர் இடம் பிடித்துள்ளதால் இந்த தொடரில் எவ்வாறு பந்துவீச்சாள வெளிப்படுத்தப்போகிறார்? என்ன செய்ய போகிறார்? என்பதை அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏனெனில் இந்த தொடரில் எடுத்தவுடன் அவரது பழைய பார்மிற்கு திரும்புவது கடினம் அதனால் அவரது பந்துவீச்சு இந்த தொடரில் பெரிய சோதனையாக இருக்கும் என்பது உறுதி. அதேபோன்று வழக்கமான இந்திய அணியின் வீரர்கள் இந்த தொடரில் இடம்பெறாத வேளையில் இரண்டாம் கட்ட வீரர்களும் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

- Advertisement -

முற்றிலும் இளம்வீரர்களை கொண்ட இந்திய அணியானது எவ்வாறு செயல்படப்போகிறது என்பதும் ஒரு பெரிய சவால்தான். மேலும் இந்த தொடரில் தனது பந்துவீச்சையும் பார்த்துக் கொண்டு ஒரு பவுலராக அணியை கேப்டன்சி செய்வது சாதாரணமான விடயம் கிடையாது. எனவே கேப்டனாக அவருக்கு ஒரு பெரிய சவால் இந்த தொடரில் காத்திருக்கிறது.

இதையும் படிங்க : விமர்சிப்பது ஈஸி சார், இந்த சீரிஸ்ல நமக்கு கிடைச்ச அந்த நன்மையும் கொஞ்சம் பாருங்க – வெங்கடேஷ் பிரசாத்துக்கு அஸ்வின் பதிலடி

அதேபோன்று இதுவரை இதுபோன்ற ஒரு மூன்றாம் கட்ட அணி எந்த தொடரிலும் பங்கேற்காத வேளையில் தற்போது அந்த அணியை வைத்து பும்ரா பலம் குறைந்த அயர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தால் அதுவும் பெரிய அளவு விமர்சனத்தை சந்திக்கும். எனவே இந்த தொடரில் கேப்டனாகவும், பந்துவீச்சாளராகவும், அணியின் சீனியர் வீரராகவும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement