INDIA : 45 நிமிட பரிசோதனையில் பும்ராவிற்கு எடுக்கப்பட்ட சோதனை மற்றும் முடிவு – விவரம் இதோ

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில்

bumrah
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா இன்று தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

india

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஊக்கமருந்து சோதனக்கு உட்படுத்தப்பட்டார். நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஊக்க மருந்து தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் அவரை பயிற்சியிலிருந்து பாதையில் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.

bumrah 1

இந்நிலையில் பும்ராவிற்கு நேற்று செய்யப்பட்ட 45 நிமிட பரிசோதனை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அவருக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு அதில் ஊக்க மருந்து உடம்பில் கலந்து இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும். ஆனால் இந்த பரிசோதனை குறித்து தற்போது ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் சேர்ந்த அதிகாரிகள் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

bumrah 2

அதன்படி பும்ராவிற்கு நடந்த பரிசோதனை சாதாரணமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் உலக கோப்பை போட்டிக்கு முன் இது போன்ற பரிசோதனைகளை ஒரு சில வீரர்களுக்கு நடத்துவோம். அதன்படி சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவரும் பும்ராவிற்கு நடத்தினோம். இது வீரர்களின் நடத்தையை கவனிக்கவே தவிர அவர்களை சோதித்துப்பார்க்க அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த போட்டியில் விளையாடுவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை அவர் இந்தியாவில் கலந்துகொண்டு விளையாடலாம் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement