வாசிம் அக்ரமின் சாதனையை உடைத்து புதிய வரலாறு நிகழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா – விவரம் இதோ

Bumrah and Akram
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட அண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் இதுவரை மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அதன்மூலம் அவர் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனை ஒன்றிணையும் முறியடித்துள்ளார்.

வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பும்ரா :

அந்த வகையில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய இந்த இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 471 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்து அசத்தியிருந்தினர். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. அந்தவகையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவே வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இந்த போட்டியில் எடுத்த இந்த 3 விக்கெட்டுகளின் மூலம் படைத்த சாதனை யாதெனில் : “சேனா” நாடுகள் என்று அழைக்கப்படும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் முதலிடத்தில் இருந்தார்.

- Advertisement -

அவர் இந்த நான்கு நாடுகளில் மட்டும் 32 போட்டிகளில் விளையாடி 146 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதுவே சேனா நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கையாக இருந்தது. இந்நிலையில் அதனை முறியடித்துள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா நேற்று எடுத்த பென் டக்கெட் விக்கெட்டின் மூலம் அவரது சாதனையை தகர்த்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து போட்டியில் நடைபெற்ற அரிதான நிகழ்வு – இப்படி நடப்பது இதுதான் முதல்முறையாம்

அதாவது பும்ராவும் அதே 32 போட்டிகளில் விளையாடி 147 விக்கெட்டுகளை எடுத்து வாசிம் அக்ரமின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 262 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆட்டத்தை துவங்க இருக்கும் வேளையில் இன்றைய போட்டியிலும் மேலும் பல விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement