எனது வாழ்வின் மறக்க முடியாத நாள். திருமணத்திற்கு பிறகு பும்ரா வெளியிட்ட முதல் பதிவு – வைரலாகும் புகைப்படம்

Bumrah

இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் மட்டும் பங்கேற்று நான்காவது போட்டியில் பும்ரா விடுப்பு எடுத்துக்கொண்டார்.
பின்னர் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனை அடுத்து பும்ராவிற்கு திருமணம் நடைபெற உள்ளது எனவே தான் அவர் சில காலம் விடுப்பு எடுத்து உள்ளார் என்று ஒரு பக்கம் புரளி கிளம்பி வந்தது.அந்தப் புரளி உண்மையாகும் வண்ணம் நேற்று ஜஸ்பிரித் பும்ரா வின் திருமணம் இனிதாக நடைபெற்று முடிந்துள்ளது.

Bumrah

ஜஸ்பிரித் பும்ரா கிரிக்கெட் வர்ணனையாளரும் மற்றும் மிஸ் இந்தியா ஃபைனலிஸ்டுமான சஞ்சனா கணேசனை நேற்று கரம் பிடித்து உள்ளார். சஞ்சனா கணேசன் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் துறையில் வர்ணனையாளராக தற்போது தனது பணியை செய்து வருகிறார்.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நைட் கிளப் என்கிற இன்டராக்டிவ் சோவின் தொகுப்பாளராகவும் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு நேற்று திருமணத்தில் முடிந்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக வெளி நபர்கள் யாரையும் அனுமதிக்காமல் குடும்ப உறுப்பினர்கள் சிலரை மட்டும் கொண்டு திருமணம் இனிதே நடைபெற்று முடிந்ததாக கூறப்பட்டு வருகிறது.

sanjan 2

மிகுந்த கட்டுப்பாட்டுடன் திருமணம் நடைபெற்றதால் திருமண புகைப்படம் கூட நேற்று வெளியாகவில்லை. இந்நிலையில் பும்ராவே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண புகைப்படத்தை வெளியிட்டு எங்கள் இருவருக்கும் கல்யாணம் நடைபெற்று முடிந்தது எங்கள் வாழ்நாளில் இது மறக்க முடியாத நாள் ஆகும் என்று மகிழ்ச்சி பொங்க தனது திருமண பதிவை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

பும்ராவின் திருமணத்திற்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் சோசியல் மீடியாக்களில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.