ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்து நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
2 இந்திய வீரர்களுக்கு ஓய்வளிக்க திட்டம் :
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த இங்கிலாந்து தொடரானது தற்போது இந்திய அணிக்கு மிக முக்கியம் வாய்ந்த தொடராக மாறி உள்ளது. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் பெரும்பாலான வீரர்களே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிக்காகவும் தேர்வுசெய்யப்பட வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கான வீரர்களின் தேர்வு ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்று இந்த இங்கிலாந்து தொடருக்கான டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட வேளையில் இன்னும் ஒரு சில தினங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தயாராகும் வகையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 முக்கிய இந்திய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக நிர்வாகத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய இருவருக்கும் ஓய்வு கொடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக இவர்கள் இருவருமே செயல்பட இருக்கின்றனர்.
இதையும் படிங்க : வெறும் 1 தான்.. இந்த பசங்களுக்கு ஐபிஎல் பணம் மட்டுமே முக்கியம்.. மயங் யாதவ் மீது ஹோக் அதிருப்தி
அதன்காரணமாக அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டு போதிய ஓய்வு அளிக்க வேண்டிய காரணத்தினால் அவர்களுக்கு இந்த இங்கிலாந்து தொடரில் ஓய்வளிக்க நிர்வாகம் முன்வந்துள்ளது. அவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.