வெறும் 1 தான்.. இந்த பசங்களுக்கு ஐபிஎல் பணம் மட்டுமே முக்கியம்.. மயங் யாதவ் மீது ஹோக் அதிருப்தி

Bradd Hogg 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக இளம் வீரர் யாதவ் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் தனது முதல் 2 ஐபிஎல் போட்டிகளில் 150 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசிய அவர் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்றார். அதன் காரணமாக வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் அவர் விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் பாராட்டினர்.

ஆனால் அடுத்த போட்டியில் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் குணமடைந்து கடந்த வங்கதேச டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அதிரடியான வேகத்தில் பவுலிங் செய்து கவனத்தை ஈர்த்த மயங் யாதவ் மீண்டும் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுக்கப்படாத அவர் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து டி20 தொடரிலும் தேர்வாகவில்லை.

- Advertisement -

ஐபிஎல் போதுமா:

இந்நிலையில் மயங் யாதவ் போன்ற பவுலர்கள் ஐபிஎல் சம்பளத்தை பெற்றால் போதும் என்ற நோக்கத்துடன் இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் அதிருப்தியுடன் விமர்சித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “மயங்க யாதவ் இளைஞராக இருந்தும் காயமடைகிறார்”

“சமீபத்தில் அவருடைய உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டின் புள்ளி விவரங்களை பார்த்தேன். அவர் ஒரே ஒரு உள்ளூர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் போதுமான அளவுக்கு விளையாடவில்லை. அதனால் அவரிடம் வெறும் வேகம் மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

ஹோக் அதிருப்தி:

“145 – 150 கிலோமீட்டர் வேகத்தில் அவரைப் போலவே வீசக்கூடிய இன்னும் சில பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனால் இளம் இந்திய வீரர்கள் வெறும் வேகத்தை மட்டுமே நம்பி வருகிறார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக சில வீரர்கள் நாம் அதிரடியான வேகத்தில் பந்து வீசி ஐபிஎல் ஒப்பந்தத்தை பெற்றால் மகிழ்ச்சியாகி விடலாம். அத்துடன் அனைத்தும் கிடைத்து விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்”

இதையும் படிங்க: விராட் கோலி இப்படி அவுட் ஆனா அதுக்கு கம்பீர் என்ன பண்ணுவாரு? – ஆகாஷ் சோப்ரா ஆதரவு

“அப்படி ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் கிடைத்ததும் அவர்களுடைய திறமை அனைத்தும் ஜன்னலுக்கு வெளியே விழுகிறது. அந்த ஒப்பந்தம் கிடைத்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் கற்க விரும்புவதில்லை. தங்களுக்கு தாங்களே எப்படி பந்து வீசி சகிப்புத்தன்மையை பெற வேண்டும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை” என்று கூறினார். இதை அடுத்து லக்னோ அணிக்காக அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement