அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தவறவிட்டது. பத்து வருடங்களுக்குப் பின்னர் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
கம்பீரை குறை சொல்வது ரொம்ப தவறு :
இந்த தொடரில் இந்திய அணியின் சார்பாக விளையாடிய நட்சத்திர வீரரான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலான சதத்தை அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு அந்த தொடர் முழுவதுமே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எஞ்சியிருந்த 4 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய விராட் கோலி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதிலும் குறிப்பாக அவர் இந்த டெஸ்டில் ஒன்பது முறை ஒரே மாதிரியாக அவுட் சைட் ஆப் பந்தை அடிக்க நினைத்து ஆட்டமிழந்தது அவருக்கு இருக்கும் பிரச்சனையை வெளிப்படையாக காண்பிக்கும் வகையில் அமைந்தது.
இப்படி விராட் கோலி ஒரே மாதிரி அவுட் சைட் ஆப் பந்தை அடிக்க நினைத்து ஆட்டமிழந்து வந்த வேளையில் கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் விராட் கோலி விடயத்தில் என்ன செய்கிறார்கள்? என்று முன்னாள் வீரர்களான கவாஸ்கர் மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகியோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா விராட் கோலி இப்படி ஆட்டமிழப்பதற்கு கம்பீரை குறை சொல்லக்கூடாது என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலியின் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பிரச்சனை இந்த தொடரில் வந்தது கிடையாது. காலம் காலமாகவே அவருக்கு அந்த பிரச்சனை இருந்து வருகிறது. எனவே கடந்த ஆறு மாதத்தில் பதவியேற்ற கம்பீர் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோரை குறை சொல்வது தவறு.
இதையும் படிங்க : இதெல்லாம் அதிர்ஷ்டத்தால் முடியாது.. ரோஹித், கோலி மறுபடியும் வலுவா கம்பேக் கொடுப்பாங்க.. டைமல் மில்ஸ்
விராட் கோலிக்கு இருக்கும் பிரச்சனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அது இந்த தொடரில் வெளிப்பட்டதால் இவர்களை குற்றம் சொல்வது நியாயம் கிடையாது. தனிப்பட்ட முறையில் விராட் கோலி அந்த தவறை திருத்திக்கொள்ள மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அதற்காக கோலி தான் உழைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.