கடந்த மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடயிருக்கிறது.
பும்ரா மற்றும் பாண்டியா விளையாடாதது ஏன்? :
அதற்கு அடுத்து இந்திய அணியானது அடுத்த மாதம் 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகள் உள்ளது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் துவங்கி நடைபெற்று வரும் வேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும், ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியாவும் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் இந்த தொடரில் இடம் பெறாதது ஏன்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் பும்ரா மற்றும் பாண்டியா ஆகிய இருவருமே கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு அவர்களது பணிச்சுமையை கருத்தில் கொண்டும் அவ்வப்போது ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அவர்கள் இருவரும் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் காயத்தை சந்திக்க நேரிடும் என்பதனாலே இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது எதிர்வரும் 2026 டி20 உலககோப்பை தொடர் தான்.
இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய உச்சத்தை தொட்ட விராட் கோலி – விவரம் இதோ
ஏனெனில் அடுத்த மாதம் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலககோப்பை தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அந்த தொடருக்கு அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு மிக முக்கியம். இதன் காரணமாகவும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் இருவருக்கும் இந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.



