இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது :
சச்சினின் சாதனையை கடந்து புதிய உச்சம் தொட்ட விராட் கோலி :
இந்திய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 84 ரன்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 62 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி தற்போது இந்திய அணி தொடர்ந்து இலக்கினை சேசிங் செய்து வரும் வேளையில் நட்சத்திர வீரரான விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை கடந்து ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் அவர் 25 ரன்களை பூர்த்தி செய்த போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 28000 ரன்களை அதிவேகமாக பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 644 இன்னிங்ஸ்களில் 28000 ரன்களை பூர்த்தி செய்திருந்தார்.
ஆனால் தற்போது தனது 624-வது இன்னிங்ஸ்சிலேயே விராட் கோலி 28000 ரன்களை பூர்த்தி செய்து சச்சினின் சாதனையை தகர்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டும் இன்றி இந்த போட்டியில் அவர் 43 ரன்களை தொட்ட போது குமார் சங்ககாராவின் சாதனையையும் தகர்த்து புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா இல்ல.. இவர்தான் 2026 டி20 வேர்ல்டுகப் தொடரோட கீ பவுலர் – சவுரவ் கங்குலி கருத்து
அந்தவகையில் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சங்ககாராவை (28016) பின்னுக்கு தள்ளி 28017 ரன்களுடன் விராட் கோலி இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



