ரோஹித் செய்த இந்த தவறுதான் மும்பை அணியின் மோசமான தோல்விக்கு காரணம் – ரசிகர்கள் கொந்தளிப்பு

- Advertisement -

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியாக 56வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 ரன்களையும், இஷான் கிஷன் 33 ரன்களை குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக சந்தீப் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நதீம் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை தக்க வைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான வார்னர் மற்றும் சஹா இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 85 மற்றும் 58 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சபாஷ் நதீம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

srh

கடந்த சில போட்டிகளாக விளையாடாத மும்பை அணியின் கேப்டன் ரோகித் நேற்று மீண்டும் ஆட்டத்தில் களமிறங்கினாலும் அவரால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் முன்னணி பந்துவீச்சாளரான பும்ரா மற்றும் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தோல்வி ஏற்பட்டது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Boult-1

மும்பை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி வருவதால் வெற்றி கிடைத்து வந்தது என்றும் இந்த போட்டியில் அவர்கள் இருவர் இல்லை என்பதாலேயே மும்பை அணி தோல்வி அடைந்தது என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement