2020 உலகக்கோப்பை தொடருக்கு இவர்கள் இருவரும் நேரடியாக விளையாடுவார்கள். ஒரு இடம் மட்டும்தான் காலி – கோலி அதிரடி கருத்து

Kohli-4
- Advertisement -

உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வை தற்போது கேப்டன் கோலி தீவிரமாக செய்து வருகிறார். இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தவரும் கோலி அவர்களிலிருந்து சில வீரர்களை தேர்வு செய்துவிட்டார். சீனியர் வீரர்களை தவிர்த்து இளம் வீரர்களின் மாற்றம் கோலிக்கு எந்த அளவுக்கு பலனை தரும் என்று உலக கோப்பை தொடரின் போதே தெரியும்.

bhuvi

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பைக்கான அணியில் ரோகித் மற்றும் கோலி போன்ற அனுபவம் வீரர்களுடன் பல இளம் வீரர்கள் விளையாட உள்ளதால் கோப்பையை கைப்பற்றும் எண்ணம் இந்திய அணியிடம் உள்ளது. இந்நிலையில் அந்த தொடர் குறித்து தற்போது கோலி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது உண்மையிலேயே கடுமையான போட்டி நிலவுகிறது.

ஒருசில இடத்திற்கு நிறைய வீரர்கள் போட்டி போடுகின்றனர். இது ஆரோக்கியமான போட்டி என்றே நான் நினைக்கிறேன். மேலும் பேட்டிங் வரிசையில் தவிர்த்து தற்போது பௌலிங் வரிசையிலும் போட்டி நிலவுகிறது. அதன்படி புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் அனுபவம் மிக்கவர்கள் என்பதாலும் சிறப்பாக பந்து வீசி வருவதால் அவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

Bhuvi

மற்றபடி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கு தான் ஒரு இடம் காலி உள்ளது. அதனையும் அன்மையில் சிறப்பாக வீசி வரும் தீபக் சாஹர் அல்லது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள ஷமி ஆகியோரில் ஒருவர் பிடிப்பார்கள் என்று கூறினார். இதன் மூலம் புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி ஆகியோர் நேரடியாக அணியில் இடம் இருப்பது உறுதியாகி விட்டது. மீதமிருக்கும் ஒரு இடத்துக்குத்தான் கோலி யாரை நினைத்து இருக்கிறார் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement