ஒரே குடும்பத்தில் ஒரே திறமைகள் இருந்து பல குடும்பங்களை நாம் பார்த்துள்ளோம் . செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் குடும்பமே ஒரு ஸ்போர்ட்ஸ் குடும்பம். கிரிக்கெட்டிலும் அப்படி சில குடும்பங்கள் இருக்கிறது. குறிப்பாக அண்ணன் தம்பிகள் ஒரே அணிக்காக விளையாடி உள்ளனர். அப்படிப்பட்ட பிரபலமான அண்ணன் தம்பி வீரர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா – இந்தியா :
இருவரும் தற்காலத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அண்ணன் தம்பிகள் ஆவர்கள். 2015 ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருவரும் விளையாடி வருகின்றனர். 2017 மற்றும் 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியதற்கு இந்த அண்ணன் தம்பிகள் பெரும்பங்கு வகித்தார்கள். தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

ஷான் மார்ஷ் மற்றும் மிச்செல் மார்ஷ் – ஆஸ்திரேலியா :
இருவரது தந்தையும் ஆஸ்திரேலிய அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்தான். ஷான் மார்ஷ் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார். 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் 13 சதம் விளாசியுள்ளார். அதே நேரத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சும் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் சர்வதேச அளவில் 3000 ரன்களும் 75 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

பிரண்டன் மெக்கலம் மற்றும் நாதன் மெக்கல்லம் – நியூசிலாந்து :
இந்த அண்ணன் தம்பிகள் 2016 முதல் 2019ம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். இதில் தம்பியான பிரண்டன் மெக்கலம் நியூசிலாந்து. அணிக்கு கேப்டனாக பின்னாளில் மாறினார். அவர் அதிரடி ஆட்டக்காரர் அண்ணன் நாதன் மெக்கல்லம் ஒரு சுழற் பந்து வீசும் ஆல்ரவுண்டர். 121 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

மைக் ஹஸி மற்றும் டேவிட் ஹஸி – ஆஸ்திரேலியா :
இந்த இருவரும் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த அண்ணன் தம்பி வீரர்கள் ஆவர்கள். 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார். 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை தொடரில் நன்றாக விளையாடுவதற்கு இந்த இருவரும் தான் காரணம். இதில் மைக் ஹஸ்சி சர்வதேச அளவில் 12 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார் 22 சதங்களும் அடித்துள்ளார். டேவிட்டு ஹஸி சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.

இர்பான் பதான் மற்றும் யூசுஃப் பதான் – இந்தியா :
இருவருமே மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இருவரும் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தனர். இர்பான் பதான் 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் .2,700 ரன்களும் 310 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் யூசப் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் சுழல் பந்து வீசுவார் 50 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.



