ரோஹித் – கோலி இவர்கள் இருவரில் சிறந்த கேப்டன் இவர்தான் – பிராட் ஹாக் பேட்டி

Hogg
Advertisement

இந்திய அணியில் தற்போது கேப்டன் மாற்றப்பட வேண்டும் என்ற பேச்சுதான் தற்போது அதிக அளவில் இருந்து வருகிறது. நடந்து முடிந்த உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனை அடுத்து கேப்டனை மாற்றியமைக்க வேண்டும் என்று சில ரசிகர்களின் கோரிக்கை பலமாக ஒலித்து வருகிறது.

Kohli

இதற்கு முக்கிய காரணம் கோலி மற்றும் ரவி சாஸ்திரி எடுத்த சில தனிப்பட்ட முடிவுகளே ஆகும். இதனால் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சு வார்த்தை வலுவாக எழுந்துள்ள நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே யார் இந்திய அணிக்கு சிறந்த கேப்டனாக இருப்பார்கள் என்று என்னிடம் யார் கேட்டாலும் நான் இருவரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஏனெனில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் இதுவரை பலமுறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று மும்பை அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். அதேபோன்று கோலி ஐபிஎல் தொடரில் சாதிக்கா விட்டாலும் இந்திய அணியை பொறுத்தவரை சிறந்த கேப்டனாக உள்ளார்.

Rohith

ஏனெனில் பீல்டிங், பேட்டிங் மற்றும் பயிற்சிகள் என அனைத்தையும் இந்திய அணிக்காக முன்னின்று சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். மேலும் இந்திய அணியில் சிறப்பான உடற்தகுதி கொண்டவர் கோலிதான் இந்திய அணியை பொறுத்தவரை அவர் சிறந்த கேப்டன்தான் எனவே இருவரில் யார் கேப்டனாக இருந்தாலும் இந்திய அணிக்கு அது நல்லதுதான் என்று மழுப்பலான பதிலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement