ஆண்டர்சனை துரத்தி சாதனை பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்த பிராட் – விவரம் இதோ

Broad

தென் ஆபிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அந்த அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி செஞ்சுரியனில் பாக்ஸிங் டே போட்டியாக நேற்று துவங்கியது.

broad 1

இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் டூபிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதன்படி டூபிளிஸ்சிஸ்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பிராட் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சனை தொடர்ந்து பிராட் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் கடந்த 10 ஆண்டுகளில் 428 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், பிராட் 400 விக்கெட்டுகள் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

broad

கடைசி பத்து ஆண்டுகளில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் லயன் (376 விக்கெட்டுகள்), நான்காவது இடத்தில் இலங்கை அணியின் ரங்கனா ஹெராத் (363 விக்கெட்டுகள்) அதற்கடுத்து ஐந்தாமிடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் (362 விக்கெட்டுகள்) அடுத்தடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -