இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் நீண்ட காலமாக இங்கிலாந்து அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் உலக வேகப் பந்துவீச்சு ஜோடிகளில் சிறப்பான ஒரு ஜோடி ஆக இவர்கள் இருவரும் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் இருவரும் தொடுக்கும் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் அவர்களிடம் பல பேட்ஸ்மேன்கள் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து மைதானத்தில் இவர்கள் இருவரும் புது பந்தினை ஸ்விங் செய்யும் விதம் எதிரணிகளின் எந்தவித நிலையில் இருந்தாலும் சரி அவர்கள் அந்த பந்தினை எதிர் கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் இங்கிலாந்து மைதானத்தில் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவரும் தற்போது இங்கிலாந்து மைதானத்திலேயே அவர்களால் பந்துவீச முடியாத பேட்ஸ்மேன், பந்துவீச கஷ்டப்படும் ஒரு பேட்ஸ்மேன் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் : தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான க்ரீம் ஸ்மித் பேட்டிங் எப்போதும் மிகவும் அபாயகரமானது என்பதை நான் ஒருகுறிப்பிட்ட தொடரில் பார்த்தேன்.

ரவுண்ட் த விக்கெட்டில் இருந்து அவருக்கு பந்துவீச ஆசைப்பட்டேன். ஆனால் அவர் அந்தப் பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். அவர் டிரைவ் ஷாட் ஆடி இருந்தால் அது கேட்ச்சாக மாறி இருக்கும் ஆனால் அவர் அப்படி ஒரு ஷாட்டை ஆடவே இல்லை. மேலும் அவருக்கு எதிராக எனது பந்துவீச்சு ஒர்க்கவுட் ஆகவில்லை எனது பந்துவீச்சு அவருக்கு எதிராக நம்பிக்கை அற்றதாக மாறியது என்று பிராட் ஸ்மித் பேட்டிங் குறித்து பாராட்டி பேசினார்.
மேலும் அவர் குறித்து பேசிய ஆண்டர்சன் கூறுகையில் : இதே பிரச்சினை முதன்முறையாக அவருக்கு எதிராக நான் 2003 ஆம் ஆண்டு விளையாடும் போது எனக்கும் இருந்தது. அந்த நேரத்தில் நான் பந்தை அவுட் ஸ்விங் மட்டுமே செய்வேன். அதாவது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக வீசுவேன். அப்போது இடது கை பேட்ஸ்மேன்களுக்கு என்னால் ஸ்விங் செய்து பந்து வீச தெரியாது நான் அவருடைய பலத்துக்கு தீனி கொடுத்துகொண்டிருந்தேன்.

அவர் எனது பந்துகளை எளிதாக விளாசினார் இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது எனது பந்துகளில் எளிதாக விளாசினார் என்று ஆண்டர்சன் கூறினார். 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து சென்று விளையாடும்போது 700 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்து அணிக்கும், உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு பயம் காண்பித்தவர் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.



