கவலைப்படாதீங்க ஐ.பி.எல் நடக்கும். ஆனா இந்தியாவில் இல்ல – ஐ.பி.எல் தலைவர் உறுதி

ipl

நான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 21 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மே 15ஆம் தேதிக்கு அதன் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

இந்த தருணத்தில் வைரசின் தாக்கம் குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தொடரை நடத்தி தருவதாக பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஐபிஎல் தொடரை நடத்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஐசிசி அந்த உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்தது இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கூறுகையில்… முழு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருக்கிறது மொத்தம் 60 போட்டிகளையும் அங்கு நடத்திவிடலாம் என்று தான் யோசித்து வருகிறோம் . அங்கு நடத்தினால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கமுடியும்.

- Advertisement -

IPLNSG

எங்கு நடக்கும் ? எப்போது நடக்கும் ? வீரர்களை எப்படி பாதுகாப்பது ? என்பது குறித்து இன்னும் 10 நாட்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார் பிரிஜேஷ் படெல். இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெறாது என்று நினைத்திருந்த ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடக்கும் என்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.