விராட் கோலியை கழற்றிவிட இதெல்லாம் ஒரு காரணமா? 2024 டி20 உ.கோ டாப் ஆர்டரை தேர்ந்தெடுத்த லாரா

Brian Lara
- Advertisement -

கோடைகாலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தடுமாற்றமாகவே விளையாடி வருகிறது. அதனால் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தடுமாறி வருகிறது. முன்னதாக இந்தத் தொடரில் பெங்களூரு அணிக்காக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 316* ரன்களை 105.33 என்ற அபாரமான சராசரியில் அடித்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

அதன் காரணமாக அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ள அவர் ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். ஆனாலும் விரைவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலியை கழற்றி விட தேர்வுக்குழு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. அதற்கேற்றார் போல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகவும் மெதுவான ஐபிஎல் சதத்தை அடித்த அவர் பரிதாப சாதனை படைத்தார்.

- Advertisement -

லாரா தேர்வு:
இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ஸ்ட்ரைக் ரேட் மட்டும் முக்கியமல்ல என்று விராட் கோலியின் விமர்சனங்களுக்கு ஜாம்பவான் பிரைன் லாரா பதிலடி கொடுத்துள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் கண்டிப்பாக விராட் கோலி விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ட்ரைக் ரேட் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததாகும். துவக்க வீரருக்கு 130 – 140 என்பது நல்ல ஸ்ட்ரைக் ரேட்டாகும். ஆனால் மிடில் ஆர்டரில் நீங்கள் விளையாடினால் 150 – 160 ஸ்ட்ரைக் ரேட் தேவைப்படும். இதே ஐபிஎல் தொடரில் கடைசி நேரங்களில் பல பேட்ஸ்மேன்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்”

- Advertisement -

“விராட் கோலி துவக்க வீரராக 130இல் துவங்கி தன்னுடைய இன்னிங்ஸை 160+ என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் முடிப்பது நல்லது. ஆனால் நீங்கள் என்னை கேட்டால் இவை அனைத்தையும் தாண்டி உலகக் கோப்பையில் இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் இருக்க வேண்டும் என்று சொல்வேன். ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு ஒரு நபர் அல்லாமல் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: ஏற்கனவே 2 மேட்ச் சேப்பாக்கத்தில் களமிறங்காத தோனி நேற்று வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் – களமிறங்கியது ஏன்?

“வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு ரோஹித் – விராட் துவக்க வீரர்களாக நன்றாக அசத்தக்கூடியவர்கள். இருப்பினும் ஓப்பனிங்கில் உங்களுக்கு இளம் வீரரின் அதிரடி தேவைப்படும். மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாட ஒரு அனுபவ வீரர் தேவைப்படும். எனவே ஆரம்பத்திலேயே மொத்த அனுபவத்தையும் இறக்குவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் நான் ஒருவரை டாப்பிலும் மற்றொருவரை 3வது இடத்திலும் களமிறக்குவேன்” என்று கூறினார்.

Advertisement