சரித்திர வெற்றியால் ஆனந்த கண்ணீர் விட்ட ஜாம்பவான் லாரா.. மகிழ்ச்சியில் அழுத கோச் கூப்பர்

Lara and Copper
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்து அசத்தியது. குறிப்பாக முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவை காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது பகலிரவு போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இந்த வெற்றியால் 27 வருடங்கள் கழித்து சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 35 வருடங்கள் கழித்து புகழ்பெற்ற காபா மைதானத்தில் வெற்றி வாகை சூடியது. 1975, 1979 உலகக் கோப்பைகளை வென்று ஒரு கட்டத்தில் விகம் அணியாக எதிரணிகளை தெறிக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் சமீபத்திய வருடங்களாகவே தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது.

- Advertisement -

ஆனந்த கண்ணீர்:
அதன் உச்சமாக 2023 உலகக் கோப்பைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறாமல் வெளியேறி மெகா வீழ்ச்சியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் தற்போது ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் உலக சாம்பியனாகவும் இருக்கும் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் 21ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

அதை மைதானத்திலிருந்து நேரடியாக வர்னணையாளராக பார்த்த ஜாம்பவான் ப்ரைன் லாரா அந்த தருணத்தை வர்ணிக்க முடியாமல் உணர்ச்சிகளால் ஆனந்த கண்ணீர் விட்டார். இருப்பினும் “இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மிகப்பெரிய நாள். ஆஸ்திரேலியாவை 27 வருடங்கள் கழித்து தோற்கடித்துள்ளோம். அனுபவம் இல்லாத இளம் அணி சாதித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று அவர் உணர்ச்சி பொங்கிய குரலுடன் வர்ணித்தார்.

- Advertisement -

அப்போது அருகிலிருந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அதை விட பயிற்சியாளராக இருக்கும் மற்றொரு முன்னாள் நட்சத்திர வீரர் கார்ல் கூப்பர் தன்னுடைய தலைமையில் இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பெற்ற வெற்றியால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஃபெவிலியினில் மகிழ்ச்சியுடன் அழுதார்.

இதையும் படிங்க: கால் உடைஞ்சாலும் கடைசி வரை நிற்பேன்னு அவர்கிட்ட சொன்னேன்.. ஆஸியை வீழ்த்திய ஆட்டநாயகன் பேட்டி

அந்த வகையில் பாதத்தில் காயத்துக்கு சந்தித்தும் அதற்காக வெளியேறாமல் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி வெற்றியை பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப் போன்ற இளம் வீரர்களால் வெஸ்ட் இண்டீஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எண்ணமாகவும் இருக்கிறது.

Advertisement