எத்தனை சூப்பர்ஸ்டார் இருந்தாலும் பயனில்லை.. டி20 உ.கோ ஜெயிக்க டிராவிட் இதை செய்யனும்.. லாரா அட்வைஸ்

Brian Lara
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. அதற்காக அமெரிக்கா பயணித்துள்ள இந்திய அணியினர் ஜூன் இரண்டாம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளனர். முன்னதாக 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் முதலும் கடைசிமாக இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது.

அதன் பின் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற எத்தனையோ தரமான வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 2வது கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அது மட்டுமின்றி 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. இத்தனைக்கும் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடும் இந்தியா பெரும்பாலும் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்திப்பது வாடிக்கையாகி விட்டது.

- Advertisement -

லாரா அட்வைஸ்:
இந்நிலையில் எத்தனை சூப்பர்ஸ்டார் வீரர்களை வைத்திருந்தாலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு சரியான திட்டம் வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். எனவே லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கு சூப்பர்ஸ்டார் வீரர்களை நம்பாமல் தரமான திட்டத்தை நம்ப வேண்டும் என்று லாரா கூறியுள்ளார்.

அதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஐசிசி நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “வெளியே இருந்து பார்க்கும் போது முந்தைய 20 ஓவர் அல்லது 50 ஓவர் உலகக் கோப்பைகளில் இந்திய அணி கடைசி நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டத்தில் தடுமாறுகின்றனர். உங்களிடம் எவ்வளவு சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல”

- Advertisement -

“இந்த உலகக் கோப்பையை எப்படி வெல்ல போகிறீர்கள் என்பது முக்கியம். அதற்காக என்ன திட்டத்தை கொண்டு செல்லப் போகிறீர்கள், உங்களுடைய ஆட்டத்தை எப்படி வடிவமைக்க போகிறீர்கள் அல்லது எதிரணியை எப்படி அட்டாக் செய்யப் போகிறீர்கள் என்பது முக்கியம். அது போன்ற சூழ்நிலையில் ராகுல் டிராவிட் தன்னுடைய அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தேவையான திட்டத்தை வகுப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: எனக்கு இருக்கும் அதே உரிமை விராட் கோலிக்கும் உண்டு.. அதுல தப்பே இல்ல.. விராட் கோலி குறித்து கம்பீர் பேட்டி

அதாவது சூப்பர் ஸ்டார் வீரர்கள் எப்படியும் வெற்றியை பெற்றுக் கொடுத்து விடுவார்கள் என்று அஜாக்கிரதையுடன் இல்லாமல் பயிற்சியாளராக டிராவிட் சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று லாரா கேட்டுக் கொண்டுள்ளார். சொல்லப்போனால் இந்த உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக விடை பெற உள்ளார். எனவே சரியான திட்டத்தை வகுத்து கோப்பையுடன் விடைபெறுவது அவருடைய கையிலேயே இருக்கிறது.

Advertisement