இந்த ஐ.பி.எல் தொடரில் இவரோட ஆட்டத்தை பார்க்க நான் மரண வெயிட்டிங் – பிரட் லீ ஓபன்டாக்

Lee

புஜாரா என்றாலே அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் சரியானவர் என்கிற கணிப்பு சமீப ஆண்டுகளாக நிலவி வந்தது. அதன் காரணமாகவே ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் அணிகள் அவரை வாங்குவதற்கு தயக்கம் காட்டினார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு புஜாரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் வாங்கப்பட்டார். புஜாரா டி20 போட்டியில் விளையாட போவதை பல ரசிகர்கள் காண மிக ஆவலாக இருக்கும் அதே வேளையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, தானும் புஜாராவின் ஆட்டத்தைப் பார்க்க மிக ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

pujara 1

மேலும் இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ கூறுகையில் : புஜாரா மிக மிக அபாரமான பேட்ஸ்மேன் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மிக அதிக அளவில் நம்பிக்கையும் மன உறுதியும் கொண்ட வீரராக நான் அவரைப் பார்க்கிறேன். அவர் எப்போதும் அணிக்கு தேவைப்படும் விஷயங்களை செய்து கொண்டே வருவார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் கூட அவர் மிகச் சிறப்பாக இந்திய அணிக்காக விளையாடினார்.

மேலும் நான் உண்மையில் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்று கூறினார். அதுமட்டுமின்றி மேலும் பேசிய லீ, டெஸ்ட் போட்டிகளை போன்று டி20 போட்டிகளில் அல்ல. வெறும் 90 நிமிடங்கள் தான் இங்கே பேட்ஸ்மேன்களால் ஆட முடியும். எனவே முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டிய நிர்ப்பந்தம் இங்கு இருக்கும்.

pujara 2

அதை புஜாரா எவ்வாறு மேற்கொள்ள போகிறார் என்று காண மிகவும் ஆவலாக உள்ளேன். அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு கிடைக்குமா ? அல்லது கிடைக்காதா ? என்பது குறித்து எனக்கு தெரியவில்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெறும் பட்சத்தில் நிச்சயமாக தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என்று நம்புகிறேன் என்று பிரெட் லீ இறுதியாக கூறி முடித்தார்.

- Advertisement -

Pujara

ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் தான் விளையாட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்த புஜாரா இம்முறை சி.எஸ்.கே அணியில் தேர்வாகியுள்ளதால் அதிரடியாக விளையாடி பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகி வருகிறார். இதன் காரணமாக அவர் இந்த தொடரில் எவ்வாறு விளையாடப்போகிறார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.