கடந்த நவ்.17ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்சில் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 53 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் இந்தியா திரும்புவதாக அறிவித்திருந்தார்.தனது மனைவியின் பிரசவ காலத்தின் போது நான் அருகில் இருக்க வேண்டும் என்று விராட் கோலி விளக்கமளித்தார். இது மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்தில்லை.
தற்போது முகமது சமிக்கு ஏற்பட்ட எலும்பு முறிவால் இவரும் இந்திய அணியில் விளையாட வாய்ப்புகள் குறைவு. அதனால் அவருக்கு பதிலாக சிராஜ் அல்லது சைனி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலியின் குழந்தை பிறப்பு குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ, விராட் கோலியின் குழந்தை ஆஸ்திரேலிய மண்ணில் பிறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ விராட் கோலி, உங்கள் குழந்தை ஆஸ்திரேலிய மண்ணில் பிறந்தால் எங்களுக்கு பெருமையாக இருக்கும். அப்போதுதான் நாங்கள் ஆஸ்திரேலியர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும். ஆண் அல்லது பெண் எந்த குழந்தையாக இருந்தாலும், அந்த குழந்தையை ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனாகிய குழந்தை என்று நாங்கள் பெருமையுடன் கூற முடியும்.

அந்த குழந்தை பிற்காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் கூட விளையாடலாம்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் பிரித்வி ஷா, மார்னஸ் லபுஷேன் போன்றவர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.



