மிகப் பெரும் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் ஐபிஎல் டி20 தொடர் நாளை துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாட இருக்கிறது. அபுதாபியில் நடைபெற இருக்கும் இந்த போட்டி நாளை இரவு சரியாக 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து ஒவ்வொரு அணியின் பயிற்சியாளர்கள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் கிரிக்கெட், விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை ஓப்பனாக பேசிவருகின்றனர். அதேபோல் சில கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இந்த தொடர் குறித்த தங்களது கணிப்புகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த வருட ஐ.பி.எல் தொடர் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்று தெரிவித்துள்ளார். அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரட் லீ பேசுகையில், “ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வாய்ப்புகள் உள்ள அணிகளில் சென்னை அணி முதன்மையாக உள்ளதாக நான் அறிகிறேன். நான் சென்னை அணியை தேர்வு செய்வதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்களே காரணம். மற்ற அணிகளை விட சென்னை அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் வலுவானவர்களாக உள்ளனர்.
துபாய் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சிற்கு கைகொடுக்கும் என்பதால் தான் சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் பிரட் லீ. பிரெட் லீ குறிப்பிட்டது போல சென்னை அணியில் இம்ரான் தாஹிர், ஜடேஜா, பியூஷ் சாவ்லா மற்றும் கரண் சர்மா ஆகியோர் உள்ளனர். அதுமட்டுமின்றி ஜாதவ், சாய் கிஷோர் ஆகியோரும் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.