ஆர்.சி.பி அணிக்கு இவரை மட்டும் துணைக்கேப்டனாக போடுங்க கண்டிப்பா கப் அவங்களுக்கு தான் – பிரெட் லீ கணிப்பு

Lee

பல்வேறு இன்னல்களை கடந்து தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து தொடருக்கான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Rcb

இந்நிலையில் இந்த தொடரிலாவது ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக பல சிறப்பான வீரர்களை அணியில் வைத்திருந்தும் அவர்களால் சாதிக்க முடியவில்லை மேலும் அந்த அணிக்கு தகுந்த தகுதியான ஆட்டத்தை அவர்கள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இதனால் இந்த ஆண்டு நிச்சயம் பெங்களூரு அணி கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பிரெட் லீ தனது கருத்தினை அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தொடர்ந்து பல ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

rcb

இம்முறையும் அவரது அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் பலர் இருக்கின்றனர். மேலும் தற்போது அவருடன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் இணைந்துள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். ஏனெனில் பின்ச் கேப்டனாக டி20 போட்டிகளில் நல்ல அனுபவம் மிக்கவர். அதனால் கோலி கேப்டனாகவும், ஆரோன் பின்ச் துணை கேப்டனாகவும் பெங்களூரு அணியை வழி நடத்தினால் நிச்சயம் எந்தவித அழுத்தமும் இன்றி கோப்பையை நோக்கி நகரலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய பிரட் லீ கூறுகையில் : இத்தனை ஆண்டுகள் பெங்களூர் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் இந்த ஆண்டு எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடினால் நிச்சயம் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று பிரட் லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.