இவரை மட்டும் பேட்டிங் செய்யும்போது சீண்டினால் சேதம் நமக்கு தான் – பிரெட் லீ ஓபன் டாக்

Lee
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 24 ஆம் தேதி தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள், கிரிக்கெட் நிர்வாகம் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் சச்சின் டெண்டுல்கரோ இந்த பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்றும் கொரோனா பாதிப்பின் காரணமாக தவிக்கும் மக்களுக்காக பிராத்தனை செய்து கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

sachin

- Advertisement -

அவரது பிறந்தநாளை ஒட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கலந்துகொண்டார். அப்போது சச்சினுடன் விளையாடிய நாட்கள் குறித்து அவர் நினைவு கூர்ந்து பல தகவல்கள் வழங்கினார். அதன்படி அப்போது ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான போட்டி குறித்தும் அவர் சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

சச்சின் குறித்து அவர் கூறுகையில் : அப்போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு கிளன் மெக்ராத் தான் தலைமை அவரது அறிவுரையை நாங்கள் பின்பற்றி செயல்படுவோம். அணியின் மூத்த வீரரான அப்போது எனக்கு மட்டும் அல்லாது அணியில் உள்ள ஜான்சன் போன்ற பல பந்து வீச்சாளர்களும் தனது அறிவுரை வழங்குவார். அவர் எங்களுக்கு அந்த சமயத்தில் குருவாகவும் திகழ்ந்து வந்தார்.

lee 1

ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் பவுலர்கள் நாங்கள் தனியாக ஒரு மீட்டிங் போடுவோம் அன்றைய போட்டி குறித்து வியூகங்களை வகுப்போம். அதன்படியே ஒவ்வொரு போட்டியிலும் செயல்படுவோம் அப்போது ஒருநாள் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மெக்ராத் அதேபோன்ற சந்திப்பில் என்னை தனியாக அழைத்து சச்சினுக்கு எதிராக பந்துவீசுவது குறித்து அறிவுரை வழங்கினார்.

- Advertisement -

போட்டியின் போது அனாவசியமாக சச்சினை சீண்ட வேண்டாம் அவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது. ஒருவேளை நீங்கள் அப்படி செய்து விட்டால் அன்றைய தினம் முழுவதும் நீ வலியால் துடிக்கும் அளவிற்கு அவர் அந்த நாளை உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு மாற்றிவிடுவார் என தன்னிடம் எச்சரித்ததாக பிரெட் லீ கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

lee 2

ஏற்கனவே இதே போன்ற கருத்தை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சக்லைன் முஷ்டாக் தெரிவித்திருந்தார். அதில் தான் தேவையில்லாமல் சச்சினை சீண்டியதால் அவர் கொடுத்த அறிவுரை காரணமாக மனம் வேதனைப்பட்டதாகவும், மேலும் அதன் பிறகு அந்த தவறை அவர் திரும்பி சர்வதேசப் போட்டிகளில் செய்யவில்லை என்றும் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement