சச்சினின் 100 சதங்கள் சாதனையை இவரே முறியடிப்பார் – பிரெட் லீ கணிப்பு

Lee
- Advertisement -

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஓய்வு நேரத்தை சமூகவலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகின்றனர்.

Ind

- Advertisement -

இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்த இந்திய வீரரால் முறியடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ. ஆஸ்திரேலிய அணிக்காக பல சாதனைகள் படைத்துள்ளார்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது வர்ணனையாளராக பணியாற்றியவர்.இந்நிலையில் சமீபத்தில் அவர் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஒப்பீடு குறித்து பேசியுள்ளார்.

sachin6

கோலி இன்னும் 7 முதல் 8 வருடங்களுக்கு தொடர்ந்து ஆடுவார் என்று நினைக்கிறேன். அப்படி ஆடினால் அவரால் சச்சின் டெண்டுல்கர் அடித்த 100 சதங்கள் சாதனையை முறியடிக்க முடியும். இதற்காக அவர் மூன்று விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று திறமை, உடல் தொகுதி கடைசியில் மன ரீதியான பலம்.

Kohli-1

இந்த மூன்றும் இவருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தால் பல சாதனைகளை அவர் முறியடிப்பார். இந்த மூன்றும் ஒருங்கிணைந்து அவருக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு இருந்தால் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து விட முடியும் என்று கூறியுள்ளார். தற்போது 31 வயதான விராட் கோலி 70 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement