இந்த ஐ.பி.எல் தொடரை இவர்களே கைப்பற்றுவார்கள் – பிரெட் லீ கணிப்பு

Lee

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு கருத்துக்களையும் பல நாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர் என பலரும் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ இந்த தொடரை கைப்பற்றப்போகும் அணி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது : இந்த ஐபிஎல் தொடரை கைப்பற்ற போகும் சாம்பியன் அணி குறித்து தேர்வு செய்வது கடினம் தான். ஆனாலும் ஒரு அணி சாம்பியன் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது என்றால் அது சிஎஸ்கே தான். நான் சிஎஸ்கே அணியை இந்த சீசனின் சாம்பியனாக தேர்வு செய்கிறேன். அவர்கள் இத்தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உண்டு.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் சிஎஸ்கே முதன்மையான அணியாக திகழ்கிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மேலும் 10 சீசன்களில் 8 சீசன்களில் இறுதிப் போட்டிக்குச் சென்று அதில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று பிரட் லீ கூறியுள்ளார்.

- Advertisement -

CskvsMi

ஏற்கனவே கடந்த சீசனில் ஒரு ரன்னில் கோப்பையைத் தவற விட்ட சிஎஸ்கே அணி இம்முறை கோப்பையை வெல்ல மும்முரம் காட்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஓய்வுக்குப் பிறகு தோனி முதல் முறையாக இத்தொடரில் விளையாட உள்ளதால் இத்தொடரை வென்று சிஎஸ்கே அணியை விட்டு விலக முடிவு எடுத்துள்ளார் என்றும் அதனால் தோனி நிச்சயம் சி.எஸ்.கே அணிக்காக இத்தொடரை கைப்பற்றுவார் என்றும் பலரும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.