இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்க போறது இந்த அணிதான் – பிரட் லீ கணிப்பு

Lee

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 தொடர்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 13 ஆவது சீசன் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடர்களில் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றியுள்ளனர்.

ipl

இந்நிலையில் தற்போது 13 வது சீசன் பல்வேறு சிக்கல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. அந்த தகவல் வெளியாகியதில் இருந்து இந்த ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற போகும் அந்த அணி யார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

யாரிடம் இது பற்றி கேட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என இரு அணிகளில் ஒன்றையே வெல்லும் அணி என்று சட்டென்று சொல்வார்கள். ஆனால் இம்முறை எந்த அணி ஐபிஎல் தொடரை வெல்லும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய வர்ணனையாளருமான பிரட் லீ தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

CskvsMi

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் இதனால் சிஎஸ்கே அணி கோப்பையை கைப்பற்ற நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்களுடைய பலமே முதிர்ச்சி அடைந்த வீரர்களையும், வயதான வீரர்களையும் வைத்து இருப்பது தான். இளம் வீரர்கள் அந்த அணியில் இருந்தாலும் பல ஆண்டுகள் விளையாடிய அனுபவம் உள்ள வீரர்கள் சிஎஸ்கே அணியில் உள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய பலம்.

- Advertisement -

csk

ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலையை பொறுத்தவரை 40 டிகிரி வரை இருக்கும் என தெரிகிறது இதனால் ஆடுகளம் கடினமாக இருக்கும். எனவே பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி பழக்கப்பட்ட வீரர்களுக்கு அது எதிர்கொள்ள எளிதாக இருக்கும். சிஎஸ்கே எனக்கு அது பெரிய சவாலாக இருக்காது. எனவே இந்த தொடர் சிஎஸ்கே அணிக்கு மிகச் சரியானதாக இருக்கும் அவர்களே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று பிரெட் லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.