இந்த தமிழ்நாட்டு தம்பி என்ன சூப்பரா பவுலிங் பண்றாரு – இளம்வீரரை புகழ்ந்த பிரெட் லீ

Lee

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பத்திலிருந்தே இருந்து இளம் வீரர்களை அதிகமாக கொண்டுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த தொடர்களை விட இந்த தொடரில் முழு பலம் கொண்ட அணியாக பார்க்கப்படும் டெல்லி அணி ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அதிலும் குறிப்பாக கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 44 ரன்கள் வித்தியாசத்திலும் டெல்லி அணி அபாரமாக வெற்றி பெற்றது.

srh

எனவே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரு தரப்பிலும் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி மோதிய ஆட்டம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க அந்த போட்டியில் டெல்லி அணியை வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சன்ரைசர்ஸ் அணி அவர்களின் தரமான பந்துவீச்சை கொண்டு அவர்களை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வைத்து டெல்லி அணிக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தங்களது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தனர். ரஷித் கான், புவனேஸ்வர் குமார் என ஒருபக்கம் உலகத்தில் பந்துவீச்சாளர்கள் அசத்த மற்றொரு பக்கம் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நட்ராஜ் தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் போட்டியின் திருப்புமுனையான விக்கெட்டாக மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Nattu

அவரது இந்த பந்துவீச்சு அந்த போட்டியை பார்த்த ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் பிரபலங்களின் கவர்ந்தது. இந்நிலையில் அவர் அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து முக்கிய வீரரான ஸ்டாய்னிஸ் விக்கெட்டையும் விழித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ நடராஜனை புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

natarajan

அதுகுறித்து அவர் கூறுகையில் : டெத் ஓவரை இப்படித்தான் வீச வேண்டும் என்பதை நடராஜன் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து யார்க்கர்களை வீசுவது ஒரு திறமை. அந்த திறமை அவரிடம் இருக்கிறது. அருமையான பௌலிங் என்று மிரட்டி பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் முன்னாள் வீரரான சேவாக்கும் அவரை ஏற்கனவே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.