சி.எஸ்.கே அணி குறித்து தோனி எடுத்த இந்த முடிவு சரியானது – சல்யூட் அடித்த பிரட் லீ

Lee

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணியாக சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது. மேலும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பதிமூன்றாவது ஐபிஎல் தொடரின் ஆரம்பமே சிஎஸ்கே அணிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

CSK-1

இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே அணி மீது பெரும் வருத்தத்தை வெளிப்படுத்தினர். தற்போது கடைசியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் சிஎஸ்கே அணியில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனாலும் இந்த போட்டியில் சரியாக விளையாடாத வீரர்களை நீக்க வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு மற்றும் கட்டாயத்துக்கு இடையே மீண்டும் தன்னுடைய பழைய அணியை வைத்து தோனி அந்த போட்டியை விளையாடினார்.

மேலும் இனி இவர்கள் அணிக்கு தேவையில்லை என்று சில வீரர்களை தோனி வெளியேற்றினாலும் அணியில் வாட்சனை ஒரு மேட்ச் வின்னர் ஆக நம்பி களம் இறங்கினார். அவர் நம்பியது போலவே வாட்சனும் சிறப்பாக போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இந்நிலையில் தோனியின் இந்த முடிவு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

watson

தோனியும், அணி நிர்வாகமும் குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களின் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களை தொடர்ந்து விளையாட வைக்கின்றனர். விமர்சனங்களை முன் வைக்காமல் மேட்ச் வின்னர்களை நம்பி அவர்களது பலத்தை வைத்து தொடர்ந்து விளையாட வைப்பது வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். தொடர் தோல்விகளுக்குப் பிறகும் வாட்சன் போன்ற மேட்ச் வரை தொடர்ந்து விளையாட வைத்த தோனியின் முடிவுக்கு தான் தலை வணங்குவதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Watson

மேலும் ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் வீரர்களின் உண்மையான திறமையின் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அவர்களை நம்பி முழு தொடரிலும் வாய்ப்பு அளிக்கலாம் அப்படி ஒரு வெற்றிகரமான கேப்டன் தோனி அவரது பலமே அதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டி உள்ளார் என்றும் பிரெட் லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.