இந்த ஐ.பி.எல் தொடரில் இந்த இருவரின் ஆட்டம் என்னை கவர்ந்து விட்டது – பிரட் லீ புகழாரம்

Lee

நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி டெல்லி அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில் இந்த தொடர் குறித்த பல்வேறு விமர்சனங்களை பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

mi

அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களை சிறப்பாக விளையாடி கலக்கினர் என்றும் ஒரு பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக பும்ரா, ரபாடா, கேஎல் ராகுல், கோலி, ஸ்டோக்ஸ், ஸ்மித், வாட்சன், கம்மின்ஸ், மோர்கன், வில்லியம்சன், வார்னர் போன்ற சர்வதேச வீரர்களுக்கு இணையாக நம் உள்ளூர் இந்திய வீரர்கள் அசத்தினர்.

அதிலும் குறிப்பாக பல இளம் வீரர்கள் தங்களது பெயரை அழுத்தமாக இந்த தொடரின் மூலம் வெளியுலகத்திற்கு காண்பித்துள்ளனர். அதன்படி படிக்கல், ராகுல் திவாதியா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, நடராஜன், கெய்க்வாட், சிவம் மாவி, சுப்மன் கில், கமலேஷ் நாகர்கோடி ஆகிய பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

ipl-2020

இந்நிலையில் தற்போது இந்த இளம் வீரர்கள் பட்டியலில் 2 பேர் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி அவர் : இந்த வருட ஐபிஎல் தொடர் நம்ப முடியாத வகையில், வியக்கதக்க வகையிலும் இருந்தது. ரசிகர்கள் இல்லாமல் இந்தத் தொடர் நடைபெற்றது வருத்தம்தான் ஆனாலும் என்னை பொறுத்தவரை இந்த வருடத்தில் பல இளம் வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து விட்டார்கள்.

- Advertisement -

Tewatia

அதிலும் குறிப்பாக தேவ்தத் படிக்கல் மற்றும் ராகுல் திவாதியா ஆகிய இருவர் சிறந்த வீரர்கள். அவர்களை போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு வரவேண்டும் என தனது பாராட்டினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.