சச்சின், லாரா இருவரில் இவரே சிறந்த பேட்ஸ்மேன். இவரை மாதிரி யாராலயும் விளையாட முடியாது – பிரட் லீ தேர்வு

Lee
- Advertisement -

கடந்தகால கிரிக்கெட்டை எடுத்து பார்த்தால் பல நம்பமுடியாத வகையில் ஜாம்பவான்கள் விளையாடி இருக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலிஸ், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதில் குறிப்பாக வலது கை பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரும் இடது கை பேட்ஸ்மேனான லாராவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக பல சாதனைகளைப் படைத்துள்ளனர்.

Lara

- Advertisement -

இருவரையும் ஒப்பிட்டு பல ஜாம்பவான்கள் தங்களது சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் பிராட்லி சச்சின் மற்றும் லாரா ஆகிய இருவரில் யார் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று தேர்வு செய்து கூறியுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய அவர் கூறியதாவது : சச்சின் டெண்டுல்கர் எனது பந்துகளை மிகவும் அனாசயமாக ஆடுவார்.

அவர் எனது பந்து விளையாடும் போது மட்டும் அவருக்கு கூடுதல் நேரம் இருப்பது போன்று தோன்றும். அதே நேரத்தில் பிரையன் லாரா எடுத்துக் கொண்டால் மிகவும் சுறுசுறுப்பான கிரிக்கெட் வீரர். எவ்வளவு வேகமாக பந்து வீசினாலும் அந்த பந்தை மைதானத்தில் 6 திசைகளில் அளிக்கக் கூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர்.

Lara 1

இதில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கூறமுடியாது. இருவருக்கும் சரிசமமான போட்டியே இருக்கும். ஆனால் என்னை பொறுத்த வரையில் சச்சின் டெண்டுல்கர் தான் மிகச்சிறந்த வீரர். அதே நேரத்தில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை எடுத்திருக்கிறார், பிரையன் லாரா அதிகபட்சமாக 400 ரன்கள் விளாசி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் இவர்களது இருவரையும் ஒப்பிடும் படி ஜாக் காலிஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் 25,134 ரன்கள் அடித்ததோடு 577 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். என்னை பொருத்தவரை இவர் மிகவும் பூர்த்தியான கிரிக்கெட் வீரர் ஆவார் என்று கூறியுள்ளார் பிரட் லீ. அதேபோன்று கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்றால் லாராவை விட சச்சின் தான் சிறந்த வீரர் என்று பிரெட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

பிரெட் லீ ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளையும், 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 380 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் தான் விளாயாடிய காலத்தில் சிறந்த அதிவேக பந்துவீச்சாளராக திகழ்ந்தவர். மேலும் பல்வேறு முன்னணி பேட்ஸ்மேன்களை தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் இவர் அலறவைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement