தற்போதுள்ள கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இவர்கள் தான் – பிரெட் லீ தேர்வு

Lee
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டாகவே பல கிரிக்கெட் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்டும், ஒத்திவைக்கப்படும் வருகின்றன. மேலும் பல போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறாத சூழலும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது படிப்படியாக கிரிகெட் போட்டிகள் பயோ பபுள் பாதுகாப்பு வளையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.

INDvsNZ

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீயிடம் கிரிக்கெட் தொடர்பான சில விடயங்களை பேட்டி கண்டுள்ளனர். அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தலை சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

விராத் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்ப முடியாத வகையில் தனது ரெக்கார்டை வைத்துள்ளார். மேலும் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். நல்ல உற்சாகமான மனநிலையுடன் இருப்பதால் விராட் கோலியால் எளிதில் ரன்களை குவிக்க முடிகிறது. மேலும் கிரிக்கெட்டை பற்றிய அறிவும் அவரிடம் அதிகம் இருக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Kohli 4

இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரியுடன் அனைத்து பார்மெட்களிலும் சிறப்பாக விளையாடும் கோலி எந்த மைதானத்திலும் ரன் குவிக்க கூடிய வீரராக இருக்கிறார் என்று பிரெட் லீ கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது உள்ள கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலர் யாரென்றால் பேட் கம்மின்ஸ் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் ஒரு ஆஸ்திரேலிய வீரரை சிறப்பான வீரர் என்று கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள்.

அவரிடம் உண்மையாகவே நல்ல திறமை இருக்கிறது. அதனால் தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராகவும் இருக்கிறார். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் அவர் சிறப்பான திட்டத்துடன் பந்து வீசுகிறார். அது மட்டுமின்றி அவரிடம் நல்ல டெக்னிக் மற்றும் உழைப்பு ஆகியவை இருக்கிறது. தற்போது உள்ள பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடும் வகையில் அவர் பந்து வீசி வருவதால் தான் அவர் ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்றும் பிரெட் லீ குறிப்பிட்டார்

Advertisement